பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலமானார்! - Seithipunal
Seithipunal


டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

86 வயதான ரத்தன் டாடா அண்மையில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக‌ அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர்‌ மும்பையில் நேற்று பிரிந்தது.

இவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய டாடா நிறுவனங்களின் தலைவராக திகழ்ந்தார்.

மேலும் இவர், 2008ஆம் ஆண்டு நானோ காரை வடிவமைத்தார். 2008ஆம் ஆண்டு, NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2008) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous business man ratan tata died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->