பிப்ரவரி மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

2023 பிப்ரவரி மாத வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல்:

பிப்ரவரி 5 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 11 - இரண்டாம் சனிக்கிழமை

பிப்ரவரி 12 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 18 - மஹா சிவராத்திரி (குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் விடுமுறை)

பிப்ரவரி 19 - ஞாயிற்றுக்கிழமை

பிப்ரவரி 20 - மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் மட்டும் விடுமுறை)

பிப்ரவரி 21 - லூசார் (சிக்கிம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை)

பிப்ரவரி 25 - 4வது சனிக்கிழமை

பிப்ரவரி 26 - ஞாயிற்றுக்கிழமை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

February month Bank Holidays list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->