ஆண் வயிற்றில் பெண் உறுப்புகள்-திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்
Female Organs in Male Stomach Shocking Information
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி என்பவர், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். கடந்த ஒரு வாரம் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி, உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப்பை என்று தெரியவந்துள்ளது. மேலும் முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாக்கும் ஓவரி இருந்துள்ளது.
ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Female Organs in Male Stomach Shocking Information