கால்பந்து போட்டி : கேரளாவில் 50 கோடி மது விற்பனை.! - Seithipunal
Seithipunal


கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில், பல நாடுகளில் உள்ள வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரளாவில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். 

கேரளாவில் உள்ள ரசிகர்கள் தங்கள் ஆதரவு அணிக்காக பேனர்கள் அமைத்தும், பெரிய திரை அமைத்தும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி போட்டியை கண்டு ரசித்தனர். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அதனால், கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் கால்பந்து ரசிகர்கள் விடிய, விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரளா மாநிலம் முழுவதும் திருவிழா கணக்காக இருந்தது. 

இதையடுத்து, உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற்ற அன்று மட்டும் கேரளாவில் சுமார் 50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மதுபான விற்பனை மைய தலைமை நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா தெரிவித்தாத்தாவது,

"கேரளா மாநிலத்தில் பொதுவாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 33 முதல் 34 கோடி வரை மது விற்பனை செய்யப்படும். ஆனால் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற்ற அன்று மட்டும் ரூ.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இன்று முதல் பத்து நாட்களுக்கு, கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறையை முன்னிட்டு மாநிலம் முழுவதும்  அரசால் நடத்தப்படும் 301 மதுக்கடைகளின் மூலம் சுமார் ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

கேரளாவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஓணம் பண்டிகையின் போது, அதாவது செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரையில் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty crores liquar sale in kerala for worldcup football match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->