பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது - நிர்மலா சீதாராமன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் குறிப்பிட்ட நேரத்திலும் கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரியும் நீக்கப்பட்டுள்ளது. 

பணவீக்கம் குறித்து, பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்து வருகிறேன். இந்தியாவில் பணவீக்கத்தை நான்கு சதவீதத்துக்கு கீழ் வைத்திருக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

பணவீக்கத்தில் உலகத்தின் சூழல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா தற்போது அனுபவித்து வருகிறது. அதேபோல் ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத உயர் பணவீக்கத்தை எதிர் கொண்டு வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

finance minister nirmala setharaman press meet in maharstra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->