அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்.. முதல் வழக்கு யார் மீது தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி ), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) முதலிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023, பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

இதையடுத்து இந்த சட்டங்கள் அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே இந்த சட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள ஒரு சாலையோர வியாபாரி மீது டெல்லி கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

பாரதிய நியாய சன்ஹிதா 2023 என்ற சட்டப் பிரிவு 285ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தில் உள்ள நடைமேடையில் கடை வைத்திருந்த சாலையோர வியாபாரி மீது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடை மேடையில் கடை வைத்திருப்பதாக கூறி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த புதிய சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் இந்தியா ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டுண்டு இருந்த காலத்தில் அவர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு தகுந்தாற் போல் கொண்டு வந்த சட்டங்களை, தற்போது நமக்கு ஏற்றார் போல் சாமானிய மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றி இந்த புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Case Filed Under New Criminal Penal Code in Delhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->