இந்திய பெருங்கடலில் ஐந்து நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைமையில் 'லா பெரோஸ்' என்ற பலதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன. 

இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையும் இணைந்து கொண்டது. இந்த நிலையில், நேற்று இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் தலைமையில் மூன்றாவது முறையாக 'லா பெரோஸ்' பலதரப்பு கடற்படை பயிற்சி தொடங்கியது. 

இந்த பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டு பயிற்சியின் நோக்கம் கடற்படைகளுக்கிடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகும். 

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு பன்னாட்டுச் சூழலில் தங்கள் செயல்பாடுகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் கடல்சார் வழிமுறைகளை நன்கு புரிந்து கொள்ளவும், ஒன்றாகச் செயல்படும் திறனை மேம்படுத்தவும் ஒரு சிறந்த தளமாக இது உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five countries participate naval training in indian ocean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->