இந்தியாவில் முதல்முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


உலோகங்களிலேயே இரும்பு இல்லாத உலோகம் என்றால் அது லித்தியம். மின் பொருட்களான செல்போன், மடிக்கணினி, டிஜிட்டல் கேமரா, வாகனங்கள் போன்றவற்றின் பேட்டரிகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மிக முக்கிய மூலப்பொருளாக இந்த உலோகம் உள்ளது.

இந்த லித்தியம் கனிமம் இதுவரைக்கும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. என்பதால், லித்தியம் பேட்டரிகள் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நாட்டில் லித்தியம் கனிமங்களைக் கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கனிம தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் மூலப்பொருளான லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five million tonnes lithium minerels found in india at first time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->