பீகார் பயங்கரவாத தாக்குதல் வழக்கு - கர்நாடகம், கேரளாவில் இருந்து 5 பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா அருகே புல்வாரி ஷெரீப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், என்.ஐ.ஏ. விசாரணையில் புல்வாரி ஷெரீப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து ரூ.25 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையில், கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர், புல்வாரி ஷெரீப்பில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். 

அதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த ஐந்து போரையும் பாட்னாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஹவாலா முறையில் பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.25 கோடி வரை பணத்தை டெபாசிட் செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for bihar terorist attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->