சட்ட விரோதமாக பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு - 5 பேர் கைது.!
five peoples arrested for illegal sex detection and abortion in dharmapuri
சட்ட விரோதமாக பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு - 5 பேர் கைது.!
தமிழகத்தில் தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சட்ட விரோதமாக நடமாடும் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு செய்து வருவதை கண்டித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அருகே உள்ள செம்மண்குழிமேடு பகுதியில் சுபாஷ் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக ஸ்கேன் வைத்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக காவல்துறையினருக்கும். சுகாதாரத்துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் படி போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், "நேற்று மட்டும்
7 பெண்களுக்கு கருவில் இருக்கும் பாலினத்தைக் கண்டறிந்து அவர்களிடம் தெரிவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கற்பகம், அவரது கணவர் விஜயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செம்மண்குழிமேடு பகுதியை சேர்ந்த சுபாஷ், ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ், இடைத்தரகர் என்று மொத்தம் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கேன் கருவி, லேப்டாப், இரண்டு சொகுசு கார்கள், ஆட்டோ, செல்போன்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples arrested for illegal sex detection and abortion in dharmapuri