மணிப்பூரில் தொடரும் பதற்றம் - போலீஸ் சீருடையுடன் ஆயுதம் கொண்டுச் சென்ற 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் தொடரும் பதற்றம் - போலீஸ் சீருடையுடன் ஆயுதம் கொண்டுச் சென்ற 5 பேர் கைது.!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந்தேதி முதல் மெய்தி-குகி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு மாநிலத்தில் பதற்றம் அதிகரித்தது. 

அதேசமயம், துப்பாக்கிச் சூடு, தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்டவையும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனால், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலீசாரின் சோதனையில், போலீஸ் போன்று உடை அணிந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது ஆயுதம் வைத்திருத்தல், போலீஸ் சீருடையை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for wear police uniform in manipur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->