2000 ரூபாய் கடனுக்காக வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள பதர்பூர் சர்வீஸ் சாலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வாலிபர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்திக் வாலிபரின் காலைப் பிடித்து சாலையில் தரதரவென இழுத்துச் சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் வந்ததை பார்த்த அந்த கும்பல் அந்த வாலிபரை நடுரோட்டில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. அவர்களை விடாது துரத்திய போலீசார் துக்ளாபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 பேரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து போலீசார் தாக்கப்பட்ட வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரையும் பிடித்தனர். 

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்து போன வாலிபர் கவுதம்புரியைச் சேர்ந்த லம்பு என்கிற கவுரவ் என்பதும், இவர் கொலைக்கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தான் இந்தக் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for youth murder in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->