சென்னை மெரினாவில் விமான சாகசம்!...பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு!...எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாகச நிகழ்ச்சியானது இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

மேலும் இந்த விமான சாகசத்தில் ரபேல், தேஜஸ், சூகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன.அதுமட்டுமல்லாமல் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இந்த நிலையில் இந்த விமான சாகசத்தை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன் மூலம் நாட்டில் உள்ள விமானப்படை எவ்வாறு இயங்குகிறது, விமானப்படையில் சாதிக்க காத்திருக்கும் இளம் மாணாக்கர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகிறது. சென்னையில் முதல்முறை இந்த "ஏர் ஷோ 2024' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், சென்னைவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flight adventure at Chennai Marina Public to enjoy in person Know when


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->