எப்.எம்., ரேடியோ சேனல்களும் பெரிய அளவில் விளம்பரபடுத்த வேண்டும் - மத்திய அரசு வலியுறுத்தல்..!
FM and radio channels should also promote booster vaccines
மத்திய அரசு கொரோனா தோற்று பரவலை தடுக்க 'பூஸ்டர் டோஸ்' எனப்படும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை செலுத்துவது குறித்து விளம்பரப்படுத்துமாறு, 'எப்.எம்.,ரேடியோ' சேனல்களை வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்காக, மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அனைத்து அரசு மையங்களிலும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ், ஜூலை 15 முதல் வரும் செப். 30 வரை 75 நாள் சிறப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு 'பூஸ்டர் டோஸ்களை செலுத்துவது மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து, அனைத்து எப்.எம்., ரேடியோ சேனல்களும் பெரிய அளவில் விளம்பரபடுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.
English Summary
FM and radio channels should also promote booster vaccines