கேரளாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட விபரீதம்.. 200க்கும் மேற்பட்டோர் காயம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் மலப்புரம் பூங்கோட்டில் நேற்றிரவு கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் உட்கார தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் யாரும் சீரியசாக இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் கூறுகையில், 23 அணிகளுக்கு இடையிலான செவன்ஸ் இறுதிப்போட்டி நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் சுமார் 20 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Football stands collapse in Kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->