மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு பெண்.! இந்தியாவில் 5 பேர் மறுவாழ்வு.!
foreign woman donate organs to five indian peoples
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மருத்துவர் ஊழியர் தெரசா பெர்னாண்டஸ். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற இவர், உலகை சுற்றி பார்ப்பதற்கு விரும்பி ஐஸ்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார்.
இந்த நிலையில், அவர் கடந்த 5-ந் தேதி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக மும்பைக்கு வந்தார். அங்கு எலிபெண்டா குகைகளை சுற்றி பார்த்த அவர், 7-ந் தேதி தென்மும்பை பகுதியில் பேருந்து ஒன்றில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை ஜாஸ்லோக் மருத்துவமனையில், அனுமதித்தனர். அங்கு அவரை சோதனை செய்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால், தெரசா பெர்னாண்டசின் மூளையின் முக்கிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் மூளையின் அழுத்தத்தை குறைப்பதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அதில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாமல், அந்த பெண் மூளை சாவு அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவரின் மகள் பெரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட அவர் தாயின் உடல் உறுப்புகளை தானம் வழங்க முன்வந்தார்.
அதன் படி, தெரசா பெர்னாண்டசின் இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை மருத்துவர்கள் அகற்றினர். அதில், இதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டது.
மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் மும்பையை சேர்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன. இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்ததன் மூலம் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர்.
English Summary
foreign woman donate organs to five indian peoples