வனத்துறை அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்ட நரிக்குறவ பெண்கள்! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, கூடப்பாக்கம் பகுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு சொந்தமானதாக ஒரு ஏரி உள்ளது. புதுச்சேரி- பத்துக்கண்ணு சாலையில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கப்பட்டது. 

அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுவதாகவும் குறிப்பாக வார இறுதி நாட்களில் அரிய வகை பறவைகளை அதிக அளவில் விற்பனை செய்ய வேட்டையாடப்படுவதாக தெரிகிறது. 

இதனை தடுக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பறவைகள் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்படுவது குறித்து திண்டிவனம் சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனத்துறை அதிகாரிகள், அந்த வழியாக துப்பாக்கி எடுத்துச் சென்ற வடிவேல் என்ற நரிக்குறவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை வாகனத்தில் ஏற்றினர். இதனை பார்த்த நரிக்குறவர் பெண்கள் வனத்துறை அதிகாரிகள் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டனர். 

மேலும் வாகனத்தின் முன்பக்க கதவைத் தட்டி வாகனத்தில் இருக்கும் நரிக்குறவர் வடிவேலுவை விடுவிக்குமாறு கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

பின்னர் வனத்துறை அதிகாரிகள் வேறு வழியில்லாமல் வாகனத்தில் இருந்த வடிவேலுவை கீழே இறக்கிவிட்டு துப்பாக்கியை கொடுத்துவிட்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forest officer snatched fox gun


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->