கலைத் திருவிழா - அரசுப்பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த, ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, பேச்சு, கவிதை, மணல் சிற்பம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக  அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு குறித்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன.

இதனால், பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய செப்டம்பர் 27ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த விவரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department date extened kalaithiruvizha competition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->