பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் - 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் மத உணர்வைப் புண்படுத்துகிறதாம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம். மஹாபாரத புராணக் கதையை அடிப்டையாகக் கொண்ட இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கல்கிதாம் மடாதிபதியுமான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் என்பவர் கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், படத்தில் நடித்துள்ள பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

கல்கிதாம் மடாதிபதியின் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான உஜ்ஜாவல் ஆனந்த் சர்மா கல்கி 2898 ஏடி படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், "இந்திய நாடு சனாதன தர்மத்தில் நம்பிக்கையும், பக்தியும் நிறைந்த நாடு. வேதங்கள் மற்றும் புராணங்களை நம் இஷ்டத்திற்கு நாம் மாற்றக் கூடாது. 

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான கல்கி அவதாரம் குறித்து வேத புராணங்களில் வேறு மாதிரி கூறப் பட்டுள்ளது. ஆனால் 'கல்கி 2898 ஏடி' படத்தில் புறங்களில் கூறப்பட்டுள்ளதற்கு முரணாகக் காட்சிப் படுத்தியுள்ளனர். இது இந்து மதம் குறித்த தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். வேத புராணங்களை மாற்றியமைக்கும் யாருக்கும் இல்லை" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Congress Leader Sent Notice to Kalki 2898 AD As it is Offending Religious Sentiments


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->