ஜம்மு-காஷ்மீர் : பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலி - 28 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்த பேருந்து பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died and twenty eight peoples injury for bus accident in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->