தகுதித் தேர்வில் முறைகேடு.! எடைக்கற்களை உடலில் கட்டிவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில், கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து துறையின் கீழ் 1,619 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலி பணி இடங்களை நிரப்புவதற்காக போக்குவரத்து துறை சார்பில் விண்ணப்பங்கள் வெளியிடபட்டது. 

அந்த பணியிடங்களுக்கு சுமார் 39 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில், ஒரு நபர் 162 செ.மீ. உயரமும், 55 கிலோ எடையும் குறைந்தபட்சம் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அந்த வகையில், நேற்று வழக்கம் போல் நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களில் சிலரது உடல் தோற்றத்திற்கும், எடைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது. இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

அதன் படி, அதிகாரிகள் அந்த தேர்வர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த தேர்வர்கள் தங்கள் தொடைப்பகுதி மற்றும் உள்ளாடைக்குள் 5 கிலோ எடை கொண்ட எடைக்கல் மற்றும் இரும்பு சங்கிலி உள்ளிட்டவற்றை மறைத்து வைத்து கட்டி இருந்தது தெரியவந்தது. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், தகுதி தேர்வு நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples wearing weight stones in qualifying examination karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->