பாம்பு கடித்த சிறுவனை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பாட்டி - பிணமாக வீட்டிற்கு வந்த சோகம்.!
four years old boy died in west bengal for snake bit
பாம்பு கடித்த சிறுவனை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பாட்டி - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.!
மேற்கு வங்களா மாநிலத்தில் உள்ள ஹூக்லி பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் பால் தாஸ் என்ற சிறுவன் தனது வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுர்ஜித்தை பாம்பு ஒன்று கடித்தது.
அந்த நேரத்தில் சுர்ஜித்தின் பெற்றோர் வீட்டில் இல்லாததால் சுர்ஜித்தை அவரது பாட்டி சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு பதில் உள்ளூர் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மந்திரவாதி இல்லாததையடுத்து, சுர்ஜித் போல்பார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சுச்சுரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சுர்ஜித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, பாம்புக் கடித்த சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ உதவி இல்லாததால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தொகுதி சுகாதார ஆய்வாளர் தெரிவித்ததாவது, "பாம்பு கடித்தால் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான தடுப்பூசிகளும் மருத்துவமனையில் உள்ளன. பாம்பு கடித்த உடனேயே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
four years old boy died in west bengal for snake bit