சுதந்திர தின ஸ்பெஷல் : செய் அல்லது செத்து மடி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்.. யார் இவர்? - Seithipunal
Seithipunal


சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தியாகிகளில் முதன்மையானவர் காந்தியடிகள். தன்னுடைய வாழ்க்கையையே தேசத்திற்கு கொடுத்தவர். தேசம் ஒற்றுமைக்காக தன் உயிரையும் தியாகம் செய்த மகாத்மா காந்தியை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!!

பிறப்பு :

மகாத்மா காந்தி அவர்கள், 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள 'போர்பந்தர்" என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும்.

கல்வி :

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பாரிஸ்டர் (டியசசளைவநச) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். 

திருமண வாழ்க்கை :

காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். 

இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி :

காந்தி தென்னாப்பிரிக்காவில் இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் விதமாக 1894ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன்மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.

ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல் கொடுக்கவும், இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1920ஆம் ஆண்டு தொடங்கினார்.

ஆங்கிலேய அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. இதை எதிர்க்கும் விதமாக 1930ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தண்டி யாத்திரை மேற்கெண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு 78 சத்தியாகிரகிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் நிறைவுபெறும்போது சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியிருந்தது.

1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை தொடங்கினார். வெள்ளையரை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் எழுந்தன. சுதந்திரத்திற்காக இந்தியர்களை ஒரே அணியில் திரள வைத்த பெருமை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையே சேரும்.

காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. 

காந்தியின் இறுதிப்பயணம் :

காந்தி தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஜனவரி 30ஆம் தேதி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது எதிர்பாராத விதமாக கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கி மூன்று குண்டுகள் பாய்ந்தது. அதன்பின் கைகள் கூப்பிய நிலையில் 'ஹேராம்... ஹேராம்" என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு தேசப்பிதாவின் உயிர் பிரிந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom fighter Mahatma Gandhi history


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->