உத்திரபிரதேசத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயில் விபத்து.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பதேப்பூர்(கான்பூர்-பிரயாக்ரஜ் பிரிவு) பகுதியருகே ராம்வான் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது இருந்தது. 

அப்பொழுது திடீரென 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, அருகிலிருந்த தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், அந்த வழியே செல்லும், வரும் ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தீபாவளிக்கு வீடு திரும்பும் பயணிகளுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், அப்பகுதியில் ரயில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freight train derails in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->