உலகில் சமாதானத்தை உருவாக்கிட நண்பர் மோடி எங்களை ஒன்றிணைப்பார் - பிரான்ஸ் அதிபர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் முடிவில் இந்த ஆண்டு ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் அடுத்த ஆண்டு நடத்தவுள்ளது. இதற்கான பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜி 20 மாநாடு நடைபெற்று முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு இந்தியாவிடம் இருக்கும். இந்தியாவின் இந்த தலைமை பதவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்திய நாட்டிற்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:- 

"ஒரே பூமி. ஒரே குடும்பம். ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது. எனது நண்பர் நரேந்திர மோடி, 'உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என்று நம்புகிறேன்" என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

french president immanuvel macron wishes to india g 20 leadership


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->