ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை பயணம்.! - Seithipunal
Seithipunal


வருகிற 15 மற்றும் 16 ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில், உக்ரைன் போர், அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மூன்று முக்கிய அமர்வுகளில் கலந்துகொள்ள இருப்பதாகவும், இது குறித்து மாநாட்டில் விவாதிக்க இருப்பதாகவும், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். 

இது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி, ஜி20 தலைவர்கள் சிலரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவும் உள்ளார். இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

தற்போது ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இந்தோனேசியா உள்ளது. ஆனால், டிசம்பர் 1ம் தேதி முதல் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

g20 conference meeting modi indhonesiya travel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->