அதிரும் கர்நாடகா தேர்தல் களம்.. கிரிக்கெட்டை மிஞ்சிய சூதாட்டம்.. சொத்துக்களை வைத்து பந்தயம்..!!
Gambling on Karnataka state election results
நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சி பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க 113 தொகுதிகள் தேவைப்படும் என்பதால் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கிங்மேக்கராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில பொது தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் அம்மாநில மக்கள் தேர்தல் முடிவுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற போவது யார் என கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை வைத்து சூதாட்டம் கர்நாடகாவில் கலை கட்டியுள்ளது. கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்.? குறிப்பிட்ட தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள்.? என பொதுமக்கள் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் சூதாட்டங்களை மிஞ்சும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் சொத்துக்களை பந்தயமாக வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் தெரிந்த நபர்களிடம் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு சிலர் சமூக வலைதளம் மூலமாக பந்தயத்திற்கு தயாரா என்ன பணம் மற்றும் சொத்துக்களின் ஆவணங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Gambling on Karnataka state election results