தனியார் மையமாகும் ஐடிபிஐ வங்கி.! பங்குகளை விற்க மத்திய அரசு, எல்ஐசி முடிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்குதலின் போது வாரா கடன் மற்றும் கடன் சுமையால் அவதிப்படும் பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

வங்கிகள் மற்றும் பொது நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ பங்குகளை கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு விற்கத் தொடங்கியது.

இந்நிலையில் எல்.ஐ.சி மற்றும் மத்திய அரசு ஐடிபிஐ வங்கியில் வைத்துள்ள 60.72 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து ஐடிஐபி வங்கி பங்கினை வாங்க EOI-யினை தெரிவிக்க டிசம்பர் 16 கடைசி தேதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த EOI-கள் 180 நாட்களுக்கு செல்லும். மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பொதுத்துறை வங்கியினையை தனியார் மையமாக்குவது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gentral Govt and lic decided to sell stacks in IDBI bank for privatization


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->