ஜெர்மன் பெண் பாலியல் வன்கொடுமை! விமான நிலையம் செல்லும் வழியில் அரங்கேறிய சம்பவம்!
German Lady Harassment in hyderabad airport
ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்த 25 வயது ஜெர்மன் பெண், விமான நிலையம் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, நண்பர்களுடன் நகரை சுற்றிய அவர், விமான நிலையம் செல்ல டாக்ஸியில் பயணித்தார். நண்பர்கள் இறங்கியபின், தனியாக பயணித்த போது, மமிடிபள்ளி அருகே, ஓட்டுநர் ஆளில்லா இடத்தில் வாகனத்தை நிறுத்தி, அவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
தூக்கமின்றி, பயங்கர அனுபவத்தை எதிர்கொண்ட அந்தப் பெண், விமான நிலையத்திற்குப் பதிலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளி ஓட்டுநர் தப்பியோடியதாகத் தகவல். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஹைதராபாத் நகரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
English Summary
German Lady Harassment in hyderabad airport