கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் : 400 கிலோ சாக்லேட்டால் உருவாக்கப்பட்டுள்ள அலாவுதீன் ஜீனி கேக்.!
Giant cake in Pudhuchery
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் முறையில் ஒரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகை அமைதி மற்றும் நல்லெண்ணெத்தை கொண்டுள்ளது.
இந்த நிலையில் சமீப சில நாட்களாக ஒவ்வொரு பண்டிகையை கொண்டாடும் வகையில் விதவிதமான மற்றும் வித்தியாசமான கேக் தயாரிக்கும் பணியில் சில பேக்கரிகள் தயாரித்து வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரியில் சூக்கா சாக்லேட் என்ற கடையை ஸ்ரீநாத் பாலசந்தர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சாக்லேட் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஏற்கனவே இந்த கடையில் அப்துல் கலாம், ரஜினிகாந்த், பாரதியார், ராணுவ வீரர் அபிநன்த் போன்ற சிலைகள் பொதுமக்களிடையே வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 400 கிலோவில் அலாவுதீன் சாக்லேட் பூதம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 182 மணி நேரத்தில் 400 கிலோ டார்க் சாக்லேட்டில் 5.5 அடி உயரம் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.