தெலுங்கானாவில் தடம் புரண்ட கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயில்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் செகந்தராபாத் ரெயில் நிலையத்திற்கு கோதாவரி எக்ஸ்பிரஸ்ரெயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது இந்த ரெயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த காயமும் ஏற்படாமல் உயிர் பிழைத்துள்ளனர். 

இதையடுத்து பயணிகள் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக அந்த வழிதடத்தில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

godavari express train derail in telungana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->