அசானி புயல் காரணமாக ஆந்திராவின் கடற்கரையில் கரை ஒதுங்கிய தங்க நிற தேர்.!
Gold chariot stranded off the coast of Andhra Pradesh due to Asani storm
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சின்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தங்க நிறத்திலான தேர் கடலில் மிதந்து கொண்டிருந்தது.
தூரத்தில் பார்க்க கோவில் மிதந்து வருவது போல இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதன்பின்னர் அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என தெரியவந்தது. மேலும் தேரில் ஆட்கள் யாரும் இல்லை.
இதனை அடுத்து மீனவர்கள் அந்தத் தேரை தங்களது படகில் கட்டிக்கொண்டு சுன்னப்பள்ளி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகில் இருந்து மீட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தேரின் மீது வெளிநாட்டு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது அந்த எழுத்துக்கள் தாய்லாந்து ஜப்பான் நல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேரில் 16.1.22 என எழுதப்பட்டிருந்தது.
அதிகாரிகள் தேர்வில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் எந்த நாட்டை சேர்ந்தது எந்த நாட்டில் இருந்து தேர் கடலில் மிதந்து வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Gold chariot stranded off the coast of Andhra Pradesh due to Asani storm