கர்நாடகாவில் தடம் புரண்ட சரக்கு ரெயில்... விபத்து இடத்தில் அதிகாரிகள்....?
Goods train derails Karnataka Officials accident site
கர்நாடகா பெலகாவி பகுதியிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து ஒரு சரக்கு ரெயில் இன்று காலை மீரஜ் நோக்கி இரும்புதாது ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

இந்த சரக்கு ரெயில் பெலகாவி பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.இதுப்பற்றி விபரம் தெரியவந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தடம் புரண்ட ரெயிலை கண்டதும் மீட்கும் பணி குறித்து தகவல் அளித்தனர். இந்த மீட்கும் பணி சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ரெயில் சேவை தொடரும் என்று ரெயில்வேத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து காரணமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.இதனால் பயணிகள் சற்று சிரமத்தில் உள்ளனர்.
English Summary
Goods train derails Karnataka Officials accident site