குறைந்த வட்டியில் கடன் - கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா முக்கிய வர்த்தக சந்தையாக இருக்கும் நிலையில், அதன் கூகுள் பே சேவை நாட்டின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், சிறு வர்த்தகங்கள், வணிகங்கள் உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில் கூகுள் பே செயலி மூலம் சாசெட் கடன் எனப்படும் குறைந்த அளவிலான கடன்களை வழங்குவதாக அந்த நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 

நாட்டில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் அடிக்கடி தேவைப்படுவதால், வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெற முடியாது. கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு தேவையான கடன்களை மற்றவரிடம் கேட்க முடியாது. 

இதனைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிக முதலாளிகளுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான தொகையை சாசெட் கடன் என்ற சிறு கடனாக வழங்க உள்ளது. இந்த கடன் வாங்கியவர்கள் இந்தத் தொகையுடன் வெறும் 111 ரூபாய் மட்டும் வட்டியாக திருப்பி செலுத்தினால் போதும் என்று கூகுள் அறிவித்துள்ளது. 

சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் இ பே லேட்டர் உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை கூகுள் பே மூலமாக செயல்படுத்த உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google company introduced low interest loan at google pay app


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->