வழிமறித்த காட்டு யானையை அமைதிபடுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்!
Government bus driver calmed down stray wild elephant
கேரள மாநிலத்தில் வனப்பகுதி சாலைகளில் வாகனங்கள் ஓட்டுபவர்களை காட்டு யானைகள் தாக்குவது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு யானைகள் தாக்கக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.
அது போன்ற ஒரு வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் யானை தாக்கவில்லை அதற்கு மாறாக இருக்கிறது.
அதிரப்பள்ளி-மலக்கப்பாரா சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தை பேபி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்ற நிலையில் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பு காட்டு யானை கபாலி வந்து நின்றது.
இதனால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினர். இதனை அடுத்து கபாலி யானை பேருந்தை நோக்கி வேகமாக வந்தது. இதனை பார்த்த பயணிகள் அனைவரும் பயந்து சத்தம் போட்டனர்.
ஆனால் பேருந்து ஓட்டுநர் யானைக்கு கேட்கும் வகையில் சத்தமாக, அமைதியாக இரு... அவர் யாரையும் தாக்க மாட்டார்... கண்டிப்பாக எனக்கு கீழ்படிவார்... என பயணிகளை பார்த்து ஓட்டுனர் சத்தமாக பேசினார்.
பின்னர் யானையை பார்த்து, தங்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார். யானை ஓட்டுநர் பேசுவதை கவனித்து கொண்டு பேருந்தை தாக்கவில்லை.
ஓட்டுநர் தெரிவித்தது போல் பேருந்தின் ஜன்னல் ஷட்டர்களை மூடிக்கொண்டு பயணிகள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
சுமார் அரை மணி நேரமாக பிறகு பேருந்தை மறித்து நின்ற யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
பேருந்தை வழிமறித்த காட்டு யானையை அமைதிப்படுத்தும் வகையில் ஓட்டுநர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Government bus driver calmed down stray wild elephant