உ.பி || நோயாளியிடம் கூடுதலாக ரூ.1 வசூலித்ததாக புகார் - மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டம் ஜக்தௌர் கிராமத்தில் அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிவ்வா எம்எல்ஏவும், பாஜக தலைவருமான பிரேம் சாகர் படேல், ஜகதூர் கிராமத்தில் உள்ள சமூக நல மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவமனையில் உள்ள மருந்தாளுனர் தன்னிடம் இருந்து கூடுதலாக ரூ.1 வசூலித்ததாக ஒரு நோயாளி புகார் அளித்தார். இந்தப்  பிரச்சனை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே மாவட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், ஒப்பந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்தனர். 

இதேபோல், இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் இரவு நேரத்தில் பெண் மருத்துவர்கள் இல்லை என்று நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், வைத்தியசாலையில் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட மருத்துவ அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்று எம்எல்ஏ பட்டேல் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital employee suspend in uttarpradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->