தேநீர் விருந்தை ரத்து செய்த ஆளுநர் மாளிகை.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தேநீர் விருந்தை ரத்து செய்த ஆளுநர் மாளிகை.!! நடந்தது என்ன?

இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவிருந்தது. இந்தத் விருந்திற்கு ஆளுநர் அலுவலகம் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது. 

இதற்கிடையே சென்னை குரோம்பேட்டையில் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த செல்வசேகரின் மகன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் உரிய மருத்துவ இடம் கிடைக்காததால் கடந்த 12ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்து ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில்,  இன்று அதிகாலை அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த மரணம் தமிழகத்தை உலுக்கி வந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதுடன் சுதந்திரதினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராஜ்பவனில் உள்ள புல்வெளிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இடியுடன் கூடிய மழை நாளையும் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆகவே கனமழையை கருத்தில் கொண்டும் விருந்தினர்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காகவும் ராஜ்பவனில் நடைபெறவிருந்த தேனீர் விருந்து நிகழ்வை ஒத்திவைப்பதாகவும், விரைவில் வேறு தேதியில் தேனீர் விருந்து நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor house cancelled tea party in kindy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->