பழங்குடியின பெண்கள் இந்துக்கள் அல்ல - பரப்பரப்பைக் கிளப்பிய ஆசிரியை இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மேனகா தாமோர். அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய ஆசிரியர் மேனகா தாமோர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். 

 

நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். 

நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை முதலில் நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடை நீக்கம் குறித்து அம்மாநில கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, "மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt school teacher suspend for speech about sheduled cast womans


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->