"ஜி-20 மாநாடு"... டெல்லியில் 20 லட்சம் மலர் மரக்கன்றுகள் நட அரசு திட்டம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லியில் 20 லட்சம் மலர் மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவற்றில் 12 லட்சம் மரக்கன்றுகளை வனம் மற்றும் வனவிலங்குத் துறையும், மற்றவையை பிற நிறுவனங்களும் நடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜக்கராண்டா, பலாஸ் போன்ற பூச்செடிகள் அதிக அளவில் நடப்படும் என்றும், ஜூலை இறுதிக்குள் மரக்கன்றுகள் நடும் பணி நிறைவடையும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் லுடியன்ஸ் டெல்லி, இந்தியா கேட் பகுதி மற்றும் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டின் முக்கிய இடமான பிரகதி மைதானம் ஆகியவற்றுக்கு இடையேயான பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt to plant 20 lakh flowering saplings in Delhi as part of preparations for G20 Summit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->