மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,40,855 கோடி.! மத்திய நிதி அமைச்சகம்.!
GST collection in May month
மே மாதத்தில் ஜிஎஸ்டி ரூபாய் 1,40,855 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.140,885 கோடியாகும். இதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும் வசூலானது. மேலும் செஸ் வரியாக ரூ.10,502 கோடியும் வசூலாகியுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 44 விழுக்காடு அதிகமாகும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களும் தொடர்ந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபின் வரி வருவாயில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் எனும் இலக்கை கடந்து இருப்பது, இது நான்காவது முறையாகும்.
English Summary
GST collection in May month