குஜராத் : கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி - பலர் கவலைக்கிடம்.! பூரண மதுவிலக்கை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்.!
Gujarat 21 people died after drinking fake liquor
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அகமதாபாத், போட்டட் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி அருந்தியதில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு போராடிய நிலையில் போட்டாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பூரண மதுவிலக்கு நடைமுறை சிக்கல்கள் கொண்டது. இதனால் இது போன்று மரணங்கள் நிகழ்கின்றன என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Gujarat 21 people died after drinking fake liquor