குஜராத் | பாலத்தை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்!
Gujarat cross bridge happened Tragedy 4 people injured
குஜராத், சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள போகாவோ ஆற்று பாலத்தின் ஒரு பகுதி நேற்று மாலை இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பழமை வாய்ந்த போகாவோ ஆற்று பாலத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் நேற்று மாலை சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக பிளந்து விழுந்ததில் 4 பேர் சிக்கி கொண்டனர்.
இது குறித்து அறிந்த கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
இதனை அடுத்து பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர், சாலைகள் மற்றும் வீட்டு வசதி துறை பாலம் விரைவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
பழமை வாய்ந்த பாலம் என்பதால் இதன் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தடையை மீறி நேற்று டிரக் ஒன்று பாலத்தை கடக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Gujarat cross bridge happened Tragedy 4 people injured