மூன்று தொழில் புரட்சிகளைத் தவறவிட்ட இந்தியா.! நான்காவது தொழில்புரட்சிக்கு தலைமை தாங்கும் - பிரதமர் மோடி உரை..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள கேவடியாவில் தொழில்துறை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கிற்கு பிரதமர் மோடி தனது உரையை அனுப்பி வைத்தார். 

அதனை, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் வாசித்தார். அதில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது, "பல்வேறு காரணங்களால், முந்தைய மூன்று தொழில் புரட்சிகளில் இந்தியா ஒரு அங்கமாக இருப்பதை தவற விட்டிருக்கலாம். ஆனால், நான்காவது தொழில் புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும். அதற்கான முழுத் திறனும் இந்தியாவுக்கு உள்ளது. 

மக்கள்தொகை, தேவை, உறுதியான நிர்வாகம் உள்ளிட்டவை இணைந்து நமக்கு கிடைத்துள்ளன. நான்காவது தொழில் புரட்சி என்பது புதிய தொழில்நுட்பமும், புதுமையான சிந்தனையும் சம்பந்தப்பட்டது ஆகும். 

உலகளாவிய சங்கிலி தொடரில் இந்தியாவை முக்கிய பாலமாக ஆக்குவதில் தொழில்துறையும், தொழில்முனைவோரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்தியாவை உலகத்திலேயே தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி கூடமாக மாற்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கருத்தரங்கில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்ததாவது, " இந்தியா உலகளாவிய உற்பத்தி கூடமாக மாறுவதை நோக்கி நடைபோட்டு வருகிறது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில், 3டி பிரிண்டிங், டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது". என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat industry seminar function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->