மோர்பி தொங்கு பாலம் விபத்து - முக்கிய குற்றவாளி கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் பழுதுபார்க்கப்பட்ட நான்கு நாளிலேயே திடீரென இடிந்து விழுந்தது. இதில், சுமார் 135 பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சுமார் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர். இவர்களில் தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர்  குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. 

ஆனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ஜெய்சுக் படேல் கைது செய்வதை தவிர்ப்பதற்கு, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

தொங்குபால குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதையடுத்து, இன்று ஜெய்சுக் பட்டேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat morbi bridge accident important accuest surrender


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->