அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு - ஹரியானா அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 14-ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். 

இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த வீரர்களுக்கு கான்ஸ்டபிள், வனக் காவலர் மற்றும் சிறைக் காவலர் உள்ளிட்ட பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரியானா மாநில முதலமைச்சர் நயாப் சிங் சயினி தெரிவித்ததாவது:- "மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக்காவலர், சிறைக் காவலர் மற்றும் சிறப்புக் காவல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். குரூப்-சி மற்றும் குரூப்-டி பதவிகளில் அக்னிவீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hariyana govt announce 10 percent reservation to agni soldires


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->