கடும் பனிமூட்டம் : அரியானா துணை முதல்வரின் கார் மீது மோதிய பாதுகாப்புக்கு வந்த கார்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல வடமாநிலங்களில் பருவமழை முடிவடைந்து, பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலையிலேயே கடும் பனிமூட்டம் ஏற்படுவதால், சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 

அதன்படி, ஹரியானா மாநிலத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றன. இந்த பனிமூட்டத்தால் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். 

இந்நிலையில் இன்று மாநிலத்தின் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, தனது காரில் சிர்சா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடைய காருடன் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. கார் தந்தூர் கிராமம் அருகே சென்றபோது அதிக பனிமூட்டம் நிலவியதால் துணை முதலமைச்சரின் கார், பாதுகாப்புக்கு சென்ற வாகனத்துடன் மோதியது.

இந்த விபத்தில் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினார். ஆனால், காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hariyana state Deputy Chief Minister car accident for fog


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->