அமிதஷாவுக்கு நெருக்கமானவர்..புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார்!
He is close to Amitash. New Chief Election Commissioner
நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பிப்ரவரி 19 இன்று காலை பதவியேற்று கொண்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் பிப்ரவரி 18-ம் தேதி நேற்றோடு ஒய்வு பெற்றார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் EC உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ்புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பிப்ரவரி 19 இன்று காலை பதவியேற்று கொண்டார்.இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார்என்பது கூடுதல் தகவல்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ்குமார் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோவில் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டு வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
61 வயதான ஞானேஷ்குமார், ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல் . அதுமட்டுமல்லாமல் 1988ம் ஆண்டு கேரளா ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் சமீபத்தில்உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் காஷ்மீர் பிரிவு பதவியை வகித்திருந்தார். அமிதஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், அமித்ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்கிறார் ஞானேஷ்குமார் .
இதனிடையே அவரது நியமனத்தால் காலியாகும் தேர்தல் ஆணையர் பணிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 1989-ம் ஆண்டின் அரியானா பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜோஷி, 2031-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
He is close to Amitash. New Chief Election Commissioner