எப்.பி.ஐ. இயக்குநராக காஷ்யாப் படேல் நியமனம்; உறுதி செய்த செனட் சபை..!
Kashyap Patel appointed as FBI Director Senate confirms
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.
எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்படுவதற்கு 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஷ் படேலின் நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது குடியரசுக் கட்சி மீதான அவரது இரும்புப் பிடியை அடிக்கோட்டு காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக, தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அறிவித்திருந்தார்.
அதில் அமெரிக்காவின் முதன்மை சட்டம்- ஒழுங்கு அமைப்பான எப்.பி.ஐ.-யின் இயக்குநராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அவர் நியமனம் செய்திருந்தார். கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
English Summary
Kashyap Patel appointed as FBI Director Senate confirms