சிம்ம ராசியில் பிறந்தவர்களா நீங்க? கொஞ்சம் செலவுகளை பார்த்து பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


12 ராசிகள் 05 வது ராசி சிம்மம். உங்கள் ராசியின் அதிபதி சூரிய பகவான்.  இந்த ராசியில் பிறந்தவர்கள் ராஜாதிபதியான சூரியனை போன்றே ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். அதாவது நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை என்று சொல்லலாம்.

நீங்கள், சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டுவீர்கள். அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். உங்களை பொறுத்தவரை யாரது பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாகவும் இருக்கவேண்டும் என்றே நீங்கள் விரும்புவீர்கள்.

ராசிக்கு 02-ஆம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருகிறார்.உங்களுக்கு பணத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால், கையில் தங்காதபடி செலவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணமே பளிச்சென்று பேசுவீர்கள் நீங்கள்.

அடுத்ததாக, சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 04-ஆம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 09-ஆம் இடத்துக்கும் செவ்வாய் வருகிறார். ஆதலால் நீங்கள் சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு.

அடுத்து, 05-ஆம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 08-ஆம் இடத்துக்கும் குரு அதிபதி. இதனால் உங்களுக்கு நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள்.

மேலும், 06 மற்றும் 07-ஆம் இடத்துக்கு அதிபதி சனி பகவான். உங்களுடைய வாழ்க்கைத்துணை மிகவும் திறமைமிக்கவராக இருப்பார். நீங்கள் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. பெரும்பாலும் சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும்.

உங்கள் பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும்வரை காத்திருந்து சேர கூடியவர்கள் நீங்கள்.

சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். அத்துடன், சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலை.

சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணா மலை தலம் விளங்குவதாக ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.

சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Common characteristics of Leo zodiac signs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->