தரையில் உருண்டு வந்த விவசாயி! நில ஆக்கிரமிப்பு புகார் அளித்தும் பயனில்லை! ஆட்சியர் அலுவகத்தில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் நில ஆக்கிரமிப்பு குறித்து விவசாயி ஒருவர் பலமுறை புகார் அளித்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை என்பதால் ஆட்சியர் அலுவகம் வரை தரையில் உருண்டு சென்று மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில ஆக்கிரமிப்பு குறித்து விவசாயி ஒருவர் பலமுறை புகார் அளித்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கையில் புகார் மனுவை எடுத்துக்கொண்டு தரையில் உருண்டு வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்கிரமிப்பாளர்கள் எனது நிலத்தை கையகப்படுத்தி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகியும் விவசாயி ஷாம்லால் நிலத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

இரண்டு ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

விவசாயி ஒருவர் உருண்டு வருவதைப் பார்த்து அதிர்ச்சியான மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியீட்டு நிலையில் தற்போது அந்த வீடியோ  வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விவசாயின் விண்ணப்பத்தை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாயி நில அபகரிப்பு புகார் அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு தரையில் உருண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்  சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He rolled on the ground and filed a petition to the collector office regarding land encroachment


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->